Transgender – treat them fairly and equally

ஆணும் பெண்ணும் கலந்த நங்கை
அவள் மனதோ மங்கை
வாழ்வில் சந்தித்தால் வறுமை
சமுதாயத்தில் அவளுக்கில்லை அம்மை
ஹார்மோன்கள் போடச்சொல்லும் கண்மை
உணர்வுகளை கட்டுப்படுத்துவது மிக கொடுமை
அவள் சொல்வதெல்லாம் உண்மை
அவளுக்கு பேசத்தெரியாது பொய்மை
மக்கள் அவளை கருதுவது தீமை
என்றுமே சமுதாயத்திற்கு அவள் வேற்றுமை
என்றாவது ஒரு நாள் ஆவாள் ஒற்றுமை
என்றெல்லாம் சொல்லும் அவள் பெயர் திருநங்கை …!!!

Siraichalai

உன் விழிகளால் என்னை சிறை பிடித்தாய்
வேண்டும் உன் சிறையில் ஆயுள் தண்டனை
என்னை விடுதலை மட்டும் செய்து விடாதே …!!!